Tuesday, November 25, 2008

'தாய்' - சிறுகுறிப்பு வரைக

மழையில் நனைந்துகொண்டே
வீட்டுக்கு வந்தேன்
'குடை எடுத்துட்டுப்
போக வேண்டியதுதானே'
என்றான் அண்ணன்
'எங்கேயாச்சும்
ஒதுங்கி நிக்க வேண்டியதுதானே'
என்றாள் அக்கா
'சளி பிடிச்சுக்கிட்டு
செலவு வைக்கப்போற பாரு'
என்றார் அப்பா
தன் முந்தானையால்
என் தலையை
துவட்டிக்கொண்டே
திட்டினாள் அம்மா
என்னையல்ல;
மழையை!"

-
மின்னஞ்சலில் நண்பன் பகிர்ந்துக்கொண்ட கவிதை

6 comments:

அருள் said...

அது தான் அம்மா...

"அம்மா"
அன்று என்னை சுமந்தவள்...
இன்று என் நினைவுகளை சுமந்தவளாய் பல்லாயிரம் மைகளுக்கு அப்பால்...

நல்ல உயிர் உள்ள கவிதையை தேர்வு செய்து பதிப்பிடதற்கு நன்றி திவ்யா.

தேவன் மாயம் said...

நல்ல கவிதைகள்!!
I don’t know how how to
Disable word verification!
My blog is in tamil!

Karthik said...

Chennai la mazhai nalla peyudhu.. arumaiyaana kavidai.. chinna vayasula naama thakudhi keala vilunda, amma tharaya adhipaanga.. "Ean thallivitha.. paapa paavam la" apadi nu solli nambhakitha.. "Adichaachu.. aluvada na!!!"...


http://lollum-nakkalum.blogspot.com/

ennoda pudhu blog.. tamila aarampichiruken.. ungal aadaravu irukumnu nambhuren....

தமிழ் மதுரம் said...

தன் முந்தானையால்
என் தலையை
துவட்டிக்கொண்டே
திட்டினாள் அம்மா
என்னையல்ல;
மழையை!"

-
m....super

Poornima Saravana kumar said...

தன் முந்தானையால்
என் தலையை
துவட்டிக்கொண்டே
திட்டினாள் அம்மா
என்னையல்ல;
மழையை!"


sema lines:)

கொடும்பாவி-Kodumpavi said...

இப்படி செல்லம் கொடுத்து உங்க குழந்தைய கெடுக்காதீங்கன்னு சொல்லி அந்த இயற்கையின் அழுகைதான் மழை. - கொடும்பாவி