Wednesday, January 21, 2009

குரல் கேட்காதா ?

எழுந்துவிட்ட அதிகாலை,

எழுப்பிவிட்ட கடிகாரம்,

காத்திருக்கும் கடமை,

இன்னும் உறங்கும் நண்பன்,

சர்க்கரை அதிகமாய் என்று
கேட்டு வாங்கி குடிக்கும் வீட்டு முற்றத்தின் கடைத்தேநீர்,

இயந்திரம் தந்த இதமான வெந்நீர்,

விரும்பிய இசைபாடும் குறுவட்டு,

சுகமாய் பயணிக்க காத்திருக்கும் வாகனம்,

இரவு சந்திப்போமா என்ற ஏக்கத்துடன் படுத்திருந்த மெத்தை,

எனக்கென்றே காத்திருக்கும் வாழ்வின் புத்தம் புது நாள்,

இத்தனை இருந்தும் ஏதோ இழப்பதாய் உணர்வு,

இரவு எப்போது வரும் என்று ஏங்குகிறேன்,

நாளைய காலையின் விழிப்பிலாவது

தாயின் , “மணி எட்டு ஆச்சு இன்னும் தூக்கத்த பாரு” எனும் குரல் கேட்காதா

என்ற எதிர்பார்ப்போடு…..



இங்ஙனம்,
பாசத்தைக்கூட தவணை முறையில் பெறும்,

மென்பொருள் வல்லுனன்.

6 comments:

நட்புடன் ஜமால் said...

நல்ல கவிதை.

பகிர்ந்தமைக்கு நன்றி.

புதியவன் said...

//தாயின் , “மணி எட்டு ஆச்சு இன்னும் தூக்கத்த பாரு” எனும் குரல் கேட்காதா

என்ற எதிர்பார்ப்போடு…..//

குடும்பத்தை விட்டு
வேலைக்காக வெளி நாட்டில்
வாழ்பவர்களின்
ஏக்கத்தை அழகாக படம் பிடித்தது
போல் இருக்கிறது கவிதை...
அருமை...வாழ்த்துக்கள் திவ்யா...

Nimal said...

//இங்ஙனம்,
பாசத்தைக்கூட தவணை முறையில் பெறும்,

மென்பொருள் வல்லுனன்.//

மென்பொருள் துறையில் பலரின் நாட்கள் இவ்வாறு தான் போகிறது. வேலைக்காக குடும்பத்தை விட்டு வாழும் பலரின் நிலையும் இத்தகையதுதான்...!!!

:(

அ.மு.செய்யது said...

அட்டையை நீட்டினால் கட்டுகட்டாக பணம் ஏடிஎம்மில்...

இருந்தும் எல்லா சொந்தங்களையும் பிரிந்து, ஏழையாகவே வாழ்ந்து கொண்டிருக்கும்
மென்பொருள் வல்லுனர்களைப் பற்றிய உங்கள் கனவு அழகான ஏக்கம்.

வார்த்தை நயம்.

venkatx5 said...

மென்பொருள் வல்லுனர்-நாலே இப்படிதாங்க.. பீல் பண்ணாதீங்க..

"கவிதைக்கு பொய்யழகு" - இதை உங்கள் நிஜ கவிதைகள் எல்லாம் பொய்யாக்கி விடுகிறது..

இங்ஙனம்,
இன்னொரு மென்பொருள் வல்லுனன்.

முஹம்மது ,ஹாரிஸ் said...

unmaiyaga ve ippadi oru kavidaiyai en thaigaka elutha vendum enru enni iruthen.......
arumaiyana kavidai....