Monday, January 26, 2009

தொடரும் நட்பில்.......அளவு கோள்!

தோன்றிய பொழுது எல்லாம்
தொலைபேசியை சுழற்றி
தொன தொன என்று
பேசிய நாட்கள்
உன் திருமணத்துக்கு
பிறகும் ……
தொடருமா? என்று
கேட்டதற்கு …
நட்புக்கு முற்று புள்ளி இல்லை
ஆனால்
அளவு கோள் உண்டு
என்று நீ கூறிய
வார்த்தை மட்டும்
இன்று என் வசம்!

தோழமையுடன்,
உன் தோழன்.

18 comments:

தேவன் மாயம் said...

நட்புக்கு முற்று புள்ளி இல்லை
ஆனால்
அளவு கோள் உண்டு
என்று நீ கூறிய
வார்த்தை மட்டும்
இன்று என் வசம்!
///
உண்மைதான்
நட்பு ஓரளவு
மட்டுமே
பின் வரும்
தேவா..

நட்புடன் ஜமால் said...

\\தோன்றிய பொழுது எல்லாம்
தொலைபேசியை சுழற்றி
தொன தொன என்று
பேசிய நாட்கள்
உன் திருமணத்துக்கு
பிறகும் ……
தொடருமா? என்று
கேட்டதற்கு …
நட்புக்கு முற்று புள்ளி இல்லை
ஆனால்
அளவு கோள் உண்டு
என்று நீ கூறிய
வார்த்தை மட்டும்
இன்று என் வசம்!\\

மிக அருமை.

வெறும் வார்த்தைகளாக இல்லை இவை.

வாழ்க்கையாகவே இருக்கு.

நட்புடன் ஜமால் said...

அளவுகோல் இல்லாத உறவு ஏதேனும் இருக்கா.

நட்புக்கும் உண்டு அளவுகோல். ஆனாலும் மற்றவைகளிருந்து மிகவும் மாறுபடும் இது.

காதலுக்கும் நட்புக்கும் இடையே ஒரு இழையே உண்டு.

இழை உடையாமல் இருப்பது அந்த அளவுகோல்.

நட்புடன் ஜமால் said...

என்ன தான் ஆணும் பெண்ணும் சமம் என்றாலும். திருமணத்துக்கு பிறகு தன் கணவனின் தோழமையை வெகு சாதரணமாக ஏற்றுக்கொள்வார்.

ஆனால் எத்தனை கணவர்களால் அப்படி முடிகிறது - இன்னும் என்னுள்ளே இந்த கேள்வி இருக்கின்றது.

நான் எப்படி இருப்பேன் என்பதற்கு வாய்ப்பு இதுவரை கிட்டவில்லை.

புதியவன் said...

//நட்புக்கு முற்று புள்ளி இல்லை
ஆனால்
அளவு கோள் உண்டு
என்று நீ கூறிய
வார்த்தை மட்டும்
இன்று என் வசம்!
//

நட்பின் எல்லை எதுவரை என்ற கேள்வியும் பதிலுமாய் மிக அழகுக்
கவிதை...வாழ்த்துக்கள் திவ்யா...

Nimal said...

//நட்புக்கு முற்று புள்ளி இல்லை
ஆனால்
அளவு கோள் உண்டு//

நிதர்சனமான உண்மை...

Nimal said...

'அளவு கோல் / அளவு கோள்' எது சரி?

பிரியமுடன்... said...

ஆஹா..ஆளு ஆளுக்கு அளவு கோள் எடுத்துட்டாங்கய்யா...இனிமே அளந்துவிடமுடியாதோ...அட அளந்துதான் பேசனுமோ....

நான் said...

நட்புக்கு எல்லை வேண்டாமே வாழ்த்துகள்

Princess said...

//காதலுக்கும் நட்புக்கும் இடையே ஒரு இழையே உண்டு.

இழை உடையாமல் இருப்பது அந்த அளவுகோல்//

Repeatey!!!

Princess said...

நட்புக் கூட காதல் போல் அத்தனை அழகு...காதல் மட்டுமல்ல நல்ல நட்பும் ஆசிர்வாதம் தான்

Anonymous said...

//நட்புக்கு முற்று புள்ளி இல்லை
//
நிஜம்ம்ம்....

மே. இசக்கிமுத்து said...

ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட நல்ல நட்பிற்கு அளவுகோளும் இல்லை முற்று புள்ளியும் இல்லை..

Anonymous said...

திவ்யா... அழகான பெயர்..
( என் முதல் பெண்ணின் பெயரும் திவ்யா..தான்)

நட்பினை பற்றிய அழகான கவிதை
அளவுடன் ஆன நட்பும் ஆனந்தமே

வாழ்த்துக்கள்.. அன்புடன் இளங்கோவன், அமீரகம்

venkat said...

நட்புக்கு முற்று புள்ளி இல்லை
ஆனால்
அளவு கோள் உண்டு
என்று நீ கூறிய
வார்த்தை மட்டும்
இன்று என் வசம்!

wonderful lines...keep rocking

venkatx5 said...

வீடு வரை உறவு..
வீதி வரை மனைவி..
காடு வரை பிள்ளை..
கடைசி வரை நண்பன்..
இதெல்லாம் என்ன மாதிரி பசங்களுக்குதானுங்கோ..
உங்களுக்கு கொஞ்சம் கஷ்டம்.. :)

anbudan vaalu said...

வாழ்க்கை விதிகளை மென்மையாக எடுத்துரைக்கும் இந்த கவிதை அருமையோ அருமை.........

JSTHEONE said...

//பிறகும் ……
தொடருமா? என்று
கேட்டதற்கு …
நட்புக்கு முற்று புள்ளி இல்லை
ஆனால்
அளவு கோள் உண்டு//

chanceless words... superb....

its very common situation in friendship ....

nice one
உண‌ர்வுக‌ள் உறுத்த‌லாகி வார்த்தை ஆன‌தோ?