காலையில்...
நீ அலுவலகம் சென்றதும்
உன் செல்பேசி அழைப்புக்காக
நாளெல்லாம் காத்திருப்பேன் நான்..
வேலையில் மறந்து விட்டேன் என்பாய் நீ!
மாலையில்...
உன்னிடம் பகிர
சின்ன சின்ன சேதியுடன்
காத்திருப்பேன் நான்...
முழுவதும் கேட்காமல்
அவ்வளுவு தானே என தேநீர் பருகுவாய் நீ!
உனக்காகவே புத்தாடை
உடுத்தி நிற்பேன் நான்...
என்னை ரசிக்காமல்
தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்ப்பாய் நீ!
உன்னிடம் கோபம் கொண்டு
பேசாமலிருப்பேன் நான்
கண்டுக்கொள்ளாமல்
வலைதளங்களில் ஆழ்ந்திருப்பாய் நீ!
இரவில்....
உனக்கான என் கனவுகளுடன்
கண் மூடிக்கொண்டிருப்பேன் நான்...
தட்டி எழுப்பாமல்
மெளனமாக என்னுடன் பேச ஆரம்பிப்பாய்...
'அந்த' கணம்
அந்தனை குறைகளையும்
நிறைவாக்கி விடுகிறாயே
என் செல்ல திருடா!!
நீ அலுவலகம் சென்றதும்
உன் செல்பேசி அழைப்புக்காக
நாளெல்லாம் காத்திருப்பேன் நான்..
வேலையில் மறந்து விட்டேன் என்பாய் நீ!
மாலையில்...
உன்னிடம் பகிர
சின்ன சின்ன சேதியுடன்
காத்திருப்பேன் நான்...
முழுவதும் கேட்காமல்
அவ்வளுவு தானே என தேநீர் பருகுவாய் நீ!
உனக்காகவே புத்தாடை
உடுத்தி நிற்பேன் நான்...
என்னை ரசிக்காமல்
தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்ப்பாய் நீ!
உன்னிடம் கோபம் கொண்டு
பேசாமலிருப்பேன் நான்
கண்டுக்கொள்ளாமல்
வலைதளங்களில் ஆழ்ந்திருப்பாய் நீ!
இரவில்....
உனக்கான என் கனவுகளுடன்
கண் மூடிக்கொண்டிருப்பேன் நான்...
தட்டி எழுப்பாமல்
மெளனமாக என்னுடன் பேச ஆரம்பிப்பாய்...
'அந்த' கணம்
அந்தனை குறைகளையும்
நிறைவாக்கி விடுகிறாயே
என் செல்ல திருடா!!
12 comments:
தலைப்பே அருமை.
வேலையில் மறந்து விட்டேன் என்பாய் நீ!
அவ்வளுவு தானே என தேநீர் பருகுவாய் நீ!
தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்ப்பாய் நீ!
வலைதளங்களில் ஆழ்ந்திருப்பாய் நீ!
\\இரவில்....
உனக்கான என் கனவுகளுடன்
கண் மூடிக்கொண்டிருப்பேன் நான்...
தட்டி எழுப்பாமல்
மெளனமாக என்னுடன் பேச ஆரம்பிப்பாய்...
'அந்த' கணம்
அந்தனை குறைகளையும்
நிறைவாக்கி விடுகிறாயே
என் செல்ல திருடா!!\\
யம்மா தாயே - என்ன சொல்லன்னே தெரியலை.
எத்தனையோ பெண்களின் உணர்வுகளை மிக அழகாக ...
அதுலையும்
கணினி வாழ்க்கைபட்டவனுக்கு
வாழ்க்கைபட்டவங்க கதி ...
//இரவில்....
உனக்கான என் கனவுகளுடன்
கண் மூடிக்கொண்டிருப்பேன் நான்...
தட்டி எழுப்பாமல்
மெளனமாக என்னுடன் பேச ஆரம்பிப்பாய்...
'அந்த' கணம்
அந்தனை குறைகளையும்
நிறைவாக்கி விடுகிறாயே
என் செல்ல திருடா!!//
ஒரு மணமான பெண்ணின் ஆசைகளையும்
உணர்வுகளையும் வார்த்தையில்
சொன்ன விதம் வெகு அழகு...
சென்சார்
செய்ய நினைத்தாலும்
செய்ய முடியாத
சென்சிடிவ் வரிகள்!!
செம கவிதைப்பா!!
நல்லாயிருக்கு!
நல்லாயிருக்கும்!!
நினைத்து நினைத்து பார்த்தால்!
நன்று வாழ்த்துகள் திவ்யா
//இரவில்....
உனக்கான என் கனவுகளுடன்
கண் மூடிக்கொண்டிருப்பேன் நான்...
தட்டி எழுப்பாமல்
மெளனமாக என்னுடன் பேச ஆரம்பிப்பாய்...
'அந்த' கணம்
அந்தனை குறைகளையும்
நிறைவாக்கி விடுகிறாயே
என் செல்ல திருடா!!//
காதலும் காதல் சார்ந்த கனவுகளும் என்றுமே
அழகுதான்...:))) மிக அருமை திவ்யா..!!
Very Good !!!
But it is possible only 2 to 3 years after marriage..
Then real life starts...???!!!
//
அந்தனை குறைகளையும்
நிறைவாக்கி விடுகிறாயே
என் செல்ல திருடா!!
//
Cho Chweet..
ரொம்ப யதார்த்தமா இருக்குங்க திவ்யா..
arumaiyana unarvugalin pathivu.......
Post a Comment