ஆயிரம் முறை
தலைவாரிய
சந்தோஷம்...
அப்பா
ஒரேயொருமுறை
தலை கோதிவிடும்
போது!!
மனசுக்குள்
லேசாக பதறினாலும்
எது காட்டிக்கொடுக்கிறது
அப்பாவிற்கு மட்டும்????
ஒரே பார்வையில்
நானிருக்கிறேன் உனக்கென்று
உணர்த்த எப்படி முடிகிறது
அப்பாவிற்கு மட்டும்???
இத்துனை புரிதலும்
பரிவான பாசமும்
காட்டுகிறாயே...
எந்தப் பாசப்படியை
கொண்டு அளந்து
பார்ப்பேன்..?
அளந்திடத்தான் முடியுமா
அப்பா காட்டும் அன்பை!!!
-----
நண்பர் 'நட்புடன் ஜமாலின்' வேண்டுகோளுக்கு இணங்க.......என் வலைதளத்தில் 'என் வசம் ....நானில்லை' தொடர் கதைக்காக எழுதிய கவிதையை இங்கே பகிர்கிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
//ஒரே பார்வையில்
நானிருக்கிறேன் உனக்கென்று
உணர்த்த எப்படி முடிகிறது
அப்பாவிற்கு மட்டும்??? //
ஏணிப்படி ??? நீ ஏன் இப்படி ???
எப்படி நீ இப்படி ??? என்று சில நேரங்களில் என் அப்பாவைக் கேட்கத் தோன்றும்.
பெரும்பாலும் தாயைப் பற்றி மட்டுமே அதிகம் கவிதைகள் எழுதப்படும் வழமையைக் கொஞ்சம் மாற்றியமைத்தமைக்கு நன்றி திவ்யா..
அதை பதியத் தூண்டிய அண்ணன் ஜமால் அவர்களுக்கும் நன்றி !!!!
ஓ... இது உங்க கவிதைகளுக்கான தனிப்பதிவா... இப்பதான் முதல் வருகை...
கவிதைகள் எல்லாம் நல்லா இருக்கு... கதைகளுக்கு நடுவிலே வாசிக்கும் கவிதைகளை விட இங்கே தனித்திருக்கும் கவிதைகள் நல்லா இருக்கிற மாதிர இருக்கு...
தொடரந்து இன்னும் நல்ல கவிதைகளும் எழுத வாழ்த்துக்ள்...!
மிக அருமை திவ்யா
நன்றியும்.
\\ஆயிரம் முறை
தலைவாரிய
சந்தோஷம்...
அப்பா
ஒரேயொருமுறை
தலை கோதிவிடும்
போது!!\\
வாஞ்சை ...
\\மனசுக்குள்
லேசாக பதறினாலும்
எது காட்டிக்கொடுக்கிறது
அப்பாவிற்கு மட்டும்????\\
காதலுக்காக இடம் மாறும் இதயம்
--- வாலிபம்
குழந்தைகளுக்காக இடம் மாறும் இதயம் --- பெற்றோர்.
\\இத்துனை புரிதலும்
பரிவான பாசமும்
காட்டுகிறாயே...
எந்தப் பாசப்படியை
கொண்டு அளந்து
பார்ப்பேன்..?
அளந்திடத்தான் முடியுமா
அப்பா காட்டும் அன்பை!!!\\
இயலாத ஒன்று.
அடிப்படையில் அன்பென்பதுக்கே அளவுகோல் கிடையாது.
அதுவும் நம்மிடம் முதல் அன்பு காட்டும், அன்பென்றால் என்ன வென்று உணரவைக்கும் நம் பெற்றோர் காட்டும் அன்பு ...
இதை குழந்தைகள் விளங்கிக்கொள்ள வேண்டும் பெற்றோர் ஆவதற்கு முன்.
உங்கள் அப்பா மனதில் நீங்கள் நிறைந்திருப்பதை விட ,
உங்கள் கவிதை எங்கள் இதயத்தில் நிறைந்து.
கதையோடு சேர்த்து படித்ததை விட
தனியாய் படிக்கும் போது இன்னும்
அழகாய் இருக்கிறது கவிதைகள்...
யப்பா...அப்ப..அப்பப்பா....என்னா கவிதை....உன் கண்ணில் நீர்வழிந்தால் மகளே என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி...
அம்மாவின் ஆண் வடிவம்தான் அப்பா...அதை புரிந்துவைத்துள்ள மகளே...நீ வாழ்க...
புல்லரிக்குதும்மா...இதுபோன்ற மகளை பெற்ற தந்தைக்கு தந்தையாக இருக்கும் என்னை போன்றவர்களின் வாழ்த்தும் சேரட்டும்!
ஆ ஆ.. தந்தை பாசத்துல நம்ம மிஞ்சுனவலா இருக்காளே-பா..
தாய் பாசம் பற்றி நிறைய படித்ததுண்டு.. அப்பா பற்றி இப்போதான் படிக்கிறேன்..
ரொம்ப நல்லா இருக்கு போங்க..
Post a Comment