Sunday, March 1, 2009

நட்பினால் காதல்???

நல்ல நட்பின் புரிதலில்
நல்ல காதல் வந்துவிட்டது
என்கிறாய்??

காதல் வந்தபின் - அந்த
நல்ல நட்பு காணாமல்
போய்விட்டதை உணர்ந்தாயா??

தோழனாக தோள் சாயவும் முடியாமல்
காதலனாக கவி பாடவும் முடியாமல்
நட்பை உடைத்து கண்டபடி கஷ்டபடுத்தும்
இந்த காதல் இனிமையானதா??

எழுதியவர்:கலா ரசிகை

6 comments:

புதியவன் said...

//காதல் வந்தபின் - அந்த
நல்ல நட்பு காணாமல்
போய்விட்டதை உணர்ந்தாயா??//

ஆண் பெண் உறவில் இந்த நட்பும் காதலும் ஒரு குழப்பமான விசயம் தான்...கவிதை நல்ல இருக்கு...

venkatx5 said...

காதல் எப்போ வரும் எப்படி வரும்னு யாருக்கும் தெரியாது.. பாசம் ரொம்ப அதிகமாகும்போது நட்பு காதாலாக மாறிடும்.. ப்ரியம் காட்டுவதை கூட உரிமையோட காட்ட காதல் ஒரு வழி..

எதோ எனக்கு தோணியதை சொல்லி விட்டேன்.. :D

Mohan R said...

காணமல் தான் போய் விட்டது :(

Ungalranga said...

//தோழனாக தோள் சாயவும் முடியாமல்
காதலனாக கவி பாடவும் முடியாமல்//
ஆமாங்க..

ரொம்ப கஷ்டம்தான்..

sankarkumar said...

கவிதை அருமை

JSTHEONE said...

//காதல் வந்தபின் - அந்த
நல்ல நட்பு காணாமல்
போய்விட்டதை உணர்ந்தாயா??//
//தோழனாக தோள் சாயவும் முடியாமல்
காதலனாக கவி பாடவும் முடியாமல்//

nalla varigal...

at present many may fell in this situation.... it shown very nicely in kavidhai... gud one...