Wednesday, April 22, 2009

அம்மா, வருவாளா???

பசிக்கிறது...
அழும் சத்தம்
களை எடுக்கும் அம்மாவின்
காதில் விழுமோ
மரத்தின் கிளையில்
சேலை கட்டித் தொங்கவிட்டு
தூங்கவைத்து போன அம்மா...

நிழலில் நான்...
வெயிலில் உருகி உருகி
அம்மா தினமும்
வேகும் நினைப்பு வரும்
வரும் அழுகையை அடக்கியே
அமைதியாகிப் போவேன்
ஆடாத தொட்டில்
உச்சி வெயில் அடிக்க
உறங்கியது போல இருப்பேன்
ஓடி வந்து பார்ப்பாள்
ஓரக்கண்ணால் ரசிப்பேன்
பசிக்குமே பிள்ளைக்கு என
என்னைத் தூக்கி
மார்போடு அணைக்கையில்
எனக்கு கண்ணீர் முட்டும்...

உலகத்தில் உள்ள
குழந்தைகளுக்கெல்லாம்
ஒரு தாய் இருக்கக்கூடாதோ
ஆதரவற்ற பிஞ்சுகளை
நினைத்து என் நெஞ்சு
கனத்துப் போகும்
மொழி பேசத் தெரிந்ததும்
அம்மாவிடம் இதைதான்
கேட்கவேண்டும் என இருக்கிறேன்
அம்மா இல்லாத பிஞ்சுக்கெல்லாம்
அழுதபோதாவது அம்மா வருவாளா...

---

Written by: Venkadarengan

3 comments:

புதியவன் said...

//மொழி பேசத் தெரிந்ததும்
அம்மாவிடம் இதைதான்
கேட்கவேண்டும் என இருக்கிறேன்
அம்மா இல்லாத பிஞ்சுக்கெல்லாம்
அழுதபோதாவது அம்மா வருவாளா...//

மிகவும் நெகிழ்வான வரிகள்...
படித்து முடித்ததும் கண்களில்
நீர் துளிர்ப்பதை தவிர்க்க முடியவில்லை...

நல்ல பகிர்வு திவ்யா...

JSTHEONE said...

//அம்மா இல்லாத பிஞ்சுக்கெல்லாம்
அழுதபோதாவது அம்மா வருவாளா...//

Chanceless lines...

touching...

kalakiteenga..

vaazhthukkal ...

Unknown said...

உருக்கமான வரிகள் !
ரசிக்கத்தக்க உணர்வுகள் !