Thursday, December 11, 2008

நினைவிருக்கிறதா?????

நீ பல வருடங்களுக்குப் பிறகு
என் வீட்டுக்கு வந்திருந்த
அந்த நவம்பர் மாத
மழை நாட்களை
உனக்கு
நினைவிருக்கிறதா?

நீ
‘மணியக்கா வீட்டுக்கு போகணும்”
என்றதும் நான் கடை கடையாகத் தேடி
கேரியர் இல்லாமல் எடுத்து வந்த
வாடகை சைக்கிளை
நினைவிருக்கிறதா?

உனக்கு தலை பின்னிக்
கொண்டிருக்கும் அம்மா
பார்க்க முடியாது என்ற
தைரியத்தில் எதிரிலிருந்த என்னைப்
பார்த்து கண்சிமிட்டி
‘எங்கே நீ பண்ணு பார்க்கலாம்”
என்று வம்புக்கிழுத்தாயே
நினைவிருக்கிறதா?

ஒரு முறை
உன் நிறத்திலேயே நானும்
சட்டை போட்டுவந்து
‘பார்த்தாயா” என்று காலரை
தூக்கிவிட்டபோது பார்த்துவிட்ட
அக்காவுக்காக அடிக்கடி
காலரை தூக்கிவிட நேர்ந்ததே
நினைவிருக்கிறதா?

ஒரு திருமண வீட்டில்
‘அதோ அவர்தான்”
என்று பார்வையாலேயே
தோழிகளுக்கு என்னை
அடையாளம் காட்டினாயே
நினைவிருக்கிறதா?

என்
முகவரியை
நானே எழுதி
உன்னிடம் தந்துவிட்ட
கடிதத்தாள்களை
நினைவிருக்கிறதா?

நீ ஊருக்கு கிளம்புகையில்
துணிகளை பெட்டியில்
அடுக்கிக்கொண்டிருந்தபோது
நான் பார்க்கவில்லை என நினைத்து
உன் மார்புக்குள் சொருகிக்கொண்ட
என் கைக்குட்டையை
நினைவிருக்கிறதா?

தொலைபேசியில்
நான் உனக்கு
முத்தம் தரும்போதெல்லாம்
பதிலுக்கு என்னசெய்வதென்று
தெரியாமல்
‘தாங்க்ஸ்” என்று வழிவாயே
நினைவிருக்கிறதா?

‘இந்த டிரஸ்
போட்டுக்கறன்னைக்கெல்லாம்
உன்னைப் பார்த்துவிடுகிறேன்”
என்று
அடிக்கடி போட்டுக்கொள்வாயே䤦lt;BR>அந்த
மாம்பழ நிறப்பாவாடையை
நினைவிருக்கிறதா?

முத்தம் கேட்டபோதெல்லாம்
‘அவங்க இருக்காங்க இவங்க பாக்றாங்க”
என்று ஏதேனும் சொல்லித் தப்பிட்டு
முதன்முதலாக
என் கவிதை பிரசுரமான அன்று
நீயாக வந்து முத்தமிட்டு
ஓடினாயே
நினைவிருக்கிறதா?

ஓரே ஒரு முறை என்று
என் சிகரெட் பிடுங்கி
புகைபிடித்து நீ இருமியபோது
பார்த்துச் சிரித்த
அந்த வழிபோக்கன் முகம்
நினைவிருக்கிறதா?

மின்சாரம் போனபோதெல்லாம்
உன் பாட்டியின்
காதில் விழாமல்
எனக்குக் கிடைத்த
சத்தமில்லா முத்தங்களை
நினைவிருக்கிறதா?

துணி உலர்த்த மாடிக்குப்
போகும்போதெல்லாம்
‘ஏண்டி இப்படி ஊருக்கே
கேக்குறமாதிரி கத்தற”
என்று உன் அம்மா திட்டுவாங்களே
நினைவிருக்கிறதா?

‘சரியாகச் சொன்னால் முத்தம்” என்று
முதுகில்
விரலால் எழுதி
விளையாடியதில்
எத்தனை முறைத் தோற்றேன் என்று
நினைவிருக்கிறதா?

முதன்முதலில்
நீ என்னுடன்
வண்டியில் வந்தபோது
என்மேல் பட்டுவிடாமல்
எவ்வளவு கவனமாக
அமர்ந்துவந்தாயென்று
நினைவிருக்கிறதா?

அதே வண்டியில்
‘என்ன அவசரம்
சுற்று வழியில்
மெதுவாகப் போ” என்று
தோளில்
சாய்ந்துகொள்வாயே
நினைவிருக்கிறதா?

நாளிதழ் வந்ததும்
உனக்கு நானும்
எனக்கு நீயும்
வார பலன்கள்
பார்ப்போமே
நினைவிருக்கிறதா?

உன் - அக்கா கல்யாணத்தில்
‘அடுத்த கல்யாணம் இவளுக்குத்தானே”
என்று யாரோ சொன்னபோது
ஏனோ என்னைக் கள்ளத்தனமாகப்
பார்த்தாயே ஒரு பார்வை
நினைவிருக்கிறதா?

இவற்றையெல்லாம் எப்போதும்
நினைவில் நிறுத்திக்கொள்ள
என்ன செய்யலாம் என யோசித்து
எனக்கு நீ
பரிசளித்த பேனாவை
நினைவிருக்கிறதா?

-ஒளிப்பதிவாளர் எஸ்டி.விஜய்மில்டன்

20 comments:

நட்புடன் ஜமால் said...

ம்... ம்...

நினைவிருக்கிறது உங்கள் கதைகள்.

இப்போ கவிதையுமா படிச்சிறுவோம்.

நட்புடன் ஜமால் said...

\\கேரியர் இல்லாமல் எடுத்து வந்த
வாடகை சைக்கிளை
நினைவிருக்கிறதா?\\

ஒரு பிளானிங்கதான்.

நட்புடன் ஜமால் said...

\\உனக்கு தலை பின்னிக்
கொண்டிருக்கும் அம்மா
பார்க்க முடியாது என்ற
தைரியத்தில் எதிரிலிருந்த என்னைப்
பார்த்து கண்சிமிட்டி
‘எங்கே நீ பண்ணு பார்க்கலாம்”
என்று வம்புக்கிழுத்தாயே
நினைவிருக்கிறதா?\\

அழகான வம்பு

நட்புடன் ஜமால் said...

\\ஒரு முறை
உன் நிறத்திலேயே நானும்
சட்டை போட்டுவந்து
‘பார்த்தாயா” என்று காலரை
தூக்கிவிட்டபோது பார்த்துவிட்ட
அக்காவுக்காக அடிக்கடி
காலரை தூக்கிவிட நேர்ந்ததே
நினைவிருக்கிறதா?\\


ஹா ஹா ஹா

நட்புடன் ஜமால் said...

\\ஒரு திருமண வீட்டில்
‘அதோ அவர்தான்”
என்று பார்வையாலேயே
தோழிகளுக்கு என்னை
அடையாளம் காட்டினாயே
நினைவிருக்கிறதா?\

அறிமுகப்படலம்

நட்புடன் ஜமால் said...

\\நீ ஊருக்கு கிளம்புகையில்
துணிகளை பெட்டியில்
அடுக்கிக்கொண்டிருந்தபோது
நான் பார்க்கவில்லை என நினைத்து
உன் மார்புக்குள் சொருகிக்கொண்ட
என் கைக்குட்டையை
நினைவிருக்கிறதா?\\

பார்த்திட்டியா

நட்புடன் ஜமால் said...

\தொலைபேசியில்
நான் உனக்கு
முத்தம் தரும்போதெல்லாம்
பதிலுக்கு என்னசெய்வதென்று
தெரியாமல்
‘தாங்க்ஸ்” என்று வழிவாயே
நினைவிருக்கிறதா?\\

ஐய! இது கூட தெரியாதா

நட்புடன் ஜமால் said...

\\முத்தம் கேட்டபோதெல்லாம்
‘அவங்க இருக்காங்க இவங்க பாக்றாங்க”
என்று ஏதேனும் சொல்லித் தப்பிட்டு
முதன்முதலாக
என் கவிதை பிரசுரமான அன்று
நீயாக வந்து முத்தமிட்டு
ஓடினாயே
நினைவிருக்கிறதா?\\

அது கவிஞனுக்கு ...

நட்புடன் ஜமால் said...

\\‘சரியாகச் சொன்னால் முத்தம்” என்று
முதுகில்
விரலால் எழுதி
விளையாடியதில்
எத்தனை முறைத் தோற்றேன் என்று
நினைவிருக்கிறதா?\\

ஐயோ பாவம்.

ஈசியான கேள்வி கேட்கலையா அவங்க ...

நட்புடன் ஜமால் said...

\\முதன்முதலில்
நீ என்னுடன்
வண்டியில் வந்தபோது
என்மேல் பட்டுவிடாமல்
எவ்வளவு கவனமாக
அமர்ந்துவந்தாயென்று
நினைவிருக்கிறதா?\\


பெண்மையப்பா பெண்மை.

நட்புடன் ஜமால் said...

\\இவற்றையெல்லாம் எப்போதும்
நினைவில் நிறுத்திக்கொள்ள
என்ன செய்யலாம் என யோசித்து
எனக்கு நீ
பரிசளித்த பேனாவை
நினைவிருக்கிறதா?\\

அருமை அருமை.

அந்த பேனாவில் இந்த கிறுக்கல்கள்

நவீன் ப்ரகாஷ் said...

விஜய் மில்ட்டனின் இந்த "கொலுசுகள் பேசக்கூடும் " தொகுப்பு எனக்கு மிகவும் பிடித்த கவிதைகள் அடங்கியது திவ்யா... மீண்டும் படித்து மகிழ்ந்தேன்... :))))

priyamudanprabu said...

////கேரியர் இல்லாமல் எடுத்து வந்த
வாடகை சைக்கிளை
நினைவிருக்கிறதா?////

நல்ல யோசனை
நன்றி........

Princess said...

ரொம்ப அருமையா இருக்கு,..காதல் அழகு ! அழகு ! அழகு ! தான்!!!

பிரியமுடன்... said...

எவ்வளவோ விஷயங்களை அவன் அவளிடம் கேட்டு திக்குமுக்காட வைத்திருக்கிறான்....
நான் உங்களை பார்த்து கேட்கும் ஒரே ஒரு கேள்விதான்....
என்னை உங்களுக்கு நியாபகம் இருக்கிறதா?

ஹ..ஹா....ஹா...ஹாஅ..

Mathu said...

Amazing lines :) Just loved reading it! Nallaa iruku divya. thanks for sharing.

மே. இசக்கிமுத்து said...

உங்களுக்கு ஞாபம் அதிகமென்று நினைக்கிறேன்.

MSK / Saravana said...

// ஸாவரியா said...

ரொம்ப அருமையா இருக்கு,..காதல் அழகு ! அழகு ! அழகு ! தான்!!!//

ரிப்பீட்டு.. :)

venkatx5 said...

/* முத்தம் கேட்டபோதெல்லாம்
‘அவங்க இருக்காங்க இவங்க பாக்றாங்க”
என்று ஏதேனும் சொல்லித் தப்பிட்டு
முதன்முதலாக
என் கவிதை பிரசுரமான அன்று
நீயாக வந்து முத்தமிட்டு
ஓடினாயே
நினைவிருக்கிறதா? */

இதை விட என்ன பெரிய பரிசு வேணும்?

Unknown said...

Anybody can help me to get this book pls.I am trying to get this book and enquried in few shops. but couldn't get it.